​ஜோர்தானில் 37 சதவீத பெண்கள் சட்டவிரோதமாக பணியாற்றுகின்றனராம்

ஜோர்தானில் பணியாற்றும் 37 சதவீதமான பெண்கள் சட்டவிரோதமாக தொழில் வாய்ப்பை பெற்றவர்கள் என்றும் அவர்களில் இலங்கையரும் உள்ளடங்குகின்றனர் என்றும் த கார்டியன் இணைதளம் வௌியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோர்தானில் பணியாற்றும் பெண்கள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள இக்கட்டுரையில், சட்டவிரோதமான முறையில் ஜோர்தான் சென்று தொழில் வாய்ப்பைப் பெற்ற பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் வௌிநாட்டுப் பெண்கள் தொழில்வழங்குனர்களினால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் என்றும் சட்டவிரோதமாக நாட்டினுல் இருப்பதனால் நாட்டின் சட்டரீதியான பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக அவர்கள் உள்ளனர் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435