‘​தேயிலை சாயம்’ கண்காட்சி கொழும்பிலும்

தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளில் மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி, மலையகத்திலும், கொழும்பிலும் நடைபெற்றது.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல், தொழில், கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களைய பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்கள் இந்தக் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேயிலை சாயம் கண்காட்சி மலையக தமிழ் மக்களின் வாழ்வியல் தொடர்பில் 40 மலையக இளைஞர், யுவதிகளால் இக்கண்காட்சிக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாவதுடன் மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பில் ஓர் ஆழமான சமூக கலந்துரையாடலை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முற்றிலும் இலவசமாக இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கொழும்பு 7 இல் உள்ள லயனல் வென்ட் கலைக்கூடத்தில் கடந்த 27ஆம் திகதி முதல் இரண்டு நாட்களுக்கு இந்தக் கண்காட்சி இடம்பெற்றது.

அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

பெருந்தோட்டத் துறையில் தொழிலில் ஈடுபடும் மலையக தொழிலாளர்களின் வேதனைகளையும், துயரங்களையும் வெளிக்கொணரும் நிழற்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

40 புகைப்படக் கலைஞர்களினால் எடுக்கப்பட்ட 40,000 புகைப்படங்களில் தெரிவு செய்யப்பட்ட 100 புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் மூலமாக மலையக மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவதாக அந்த புகைப்பட கண்காட்சியில் தனது புகைப்படத்தை காட்சிப்படுத்தியிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகபாவனை, புதியவர்கள், மலையக மக்களின் வாழ்வாதாரம் முதலான பல தலைப்புகளின் கீழ் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தலவாக்கலை, ஊவாஐலண்ட்ஸ், பதுளை முதலான மலையகத்தின் மூன்று இடங்களில் இந்த புகைப்பட கண்காட்சி முன்னதாக நடத்தப்பட்டிருந்த நிலையில் கொழும்பிலும் நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியை பார்வையிட்ட போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியஇ

இந்தப் புகைப்படக் கண்காட்சியை நாடுமுழுவதும் காட்சிப்படுத்த வேண்டும். பெருந்தோட்டத்துறை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் உணர்வு ரீதியாக அறியக்கூடிய வகையில் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435