WeChat மூலம் தெற்காசிய நாடுகளில் பெண்கள் விற்பனை: அதிர்ச்சித் தகவல்

சீனாவில் செயற்படும் வீ- செட் WeChat  சமூக வலைதளம் மூலம் தெற்காசிய நாடுகளில் பெண்களை விற்பனை செய்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியிலிருந்து வந்த ஈ. வை 264 எனும் விமானத்தின் ஊடாக அவர் நாட்டிற்குள் பிரவேசித்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த 28 வயதுடைய சந்தேகத்திற்குரியவரின் கையடக்க தொலைப்பேசியினை சோதனைக்கு உட்படுத்திய போது பல்வேறு தகவல்கள் வெளியானதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, அவர் வீ- செட் WeChat  ஊடாக தான் ஒரு பெண் எனவும், சீனாவில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாகவும் கூறி தெற்காசிய பெண்களை அழைத்து சென்று சீனாவில் விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகத்திற்குரியவர் இலங்கையிருந்து அடையாளப்படுத்தப்பட்ட பெண்களை அழைத்து செல்வதற்காகவே  இலங்கை வந்துள்ளதாகவும், அவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435