வௌிநாடுகளில் பணியாற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணிய ஊழியர்கள் அனைவரையும் நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்நோக்கியுள்ள நிலையினால் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் அதற்கான தீர்வாக பணியக ஊழியர்கள் நாட்டுக்கு அழைக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூழ்நிலைக்குப் பொருத்தமான தீர்வாக அவ்வூழியர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதுளை, ஹாலியெல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.