‍தொழிலற்ற கண்டி இளைஞர் யுவதிகளுக்கோர் வாய்ப்பு

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தையொன்று எதிர்வரும் 21ம் திகதி பொல்கொல்லை தொழிற்கல்வி பயிற்சி மத்தியநிலையத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கண்டி மாவட்ட தொழிற்கல்வி வழிகாட்டிப் பிரிவு, மத்திய மாகாணசபை ஆகியன இணைந்து இத்தொழிற்சந்தையை ஏற்பாடு செய்துள்ளன.

இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல், சுயதொழிலுக்கான வாய்ப்புக்களை வழங்குதல் என்பவற்றை நோக்காக கொண்டு நடத்தப்படும் இத்தொழிற்சந்தையில் கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் வியாபாரம் என்பவற்றுக்கான கடனை பெறும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன. அது தவிர மேலும் பல சேவைகளையும் இத் தொழிற்சந்தையினூடாக வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தொழிற்சந்தையில் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. தொழிலை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் தத்தமது கல்வி மற்றும் ஏனைய சான்றிதழ்களுடன் 21ம் திகதி காலை 8.30 மணிக்கு பொல்கொல்ல இளைஞர் சேவைகள் பயிற்சி மத்திய நிலையத்திற்கு வருகைத் தருமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொழிற்சந்தை தொடர்பான மேலதிக விபரங்களை 0812 494 237 அல்லது 0812 499 500 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435