1,000 ரூபா சம்பள உயர்வுகோரி மலையகத்தில் மனிதசங்கிலி போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வுகோரி மலையகத்தில் பல பகுதிகளிலும் தோட்டத் தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

நுவரெலியா, ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வூட், புஸ்ஸலாவ, டயகம, அக்கரப்பதனை, கொட்டகலை, தலவாக்கலை, வட்டவளை, கினிகத்தேனை, இராகலை, கந்தபளை, நானுஓயா, லிந்துலை, டிக்கோயா, புளியாவத்தை, கண்டி – மடுல்கலை, உனனகலை, கலாபொக்க, மாவுசா, கோமரை ஆகிய பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பதாதைகளையும், கறுப்புக் கொடிகளையும் ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நகரங்களும் ஸ்தம்பிக்கப்பட்டு நகர வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியதோடு, வாகன சாரதிகள், நகர வர்த்தகர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அப்பகுதிகளின் பிரதேச மற்றும் நகர சபைகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435