1,000 ரூபா சம்பள உயர்வு கோரி இடம்பெற்ற காலி முகத்திடல் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற போராட்டத்;தில ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கருப்புச் சட்டையுடன்; அணிதிரண்டிருந்தனர்.

காலை 10 மணிக்கு காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் ஒன்று கூடினர்.

‘ஆடம்பரம் வேண்டாம் 1000 ரூபா சம்பள அதிகரிப்பே வேண்டும்’, ‘மாற்றத்தை நோக்கிய மலையகப் புரட்சி’, ‘முதலாளியே தொழிலாளியின் உதிரத்தை உறிஞ்சாதே’ போன்ற வாசக்றனர்ங்களைத் தாங்கியவாறு போராட்டக் காரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

காலை 10 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம் மதியம் 12 மணிவரை காலிமுகத்திடலில் தொடர்ந்தது.

பின்னர் ஜனாதிபதி செயலகம் நோக்கி இளைஞர்கள் பேரணியாக சென்றனர்.

இதன்போது, ஜனாதிபதி செயலக முன்றலில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி, பாதுகாப்பு பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக போராட்டக்காரர்கள் அந்த இடத்திலேயே நின்றவாறும், அமர்ந்தவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அல்லது மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களோ தம்மை நேரில் வந்து வந்து சந்தித்து, தமது கோரிக்கைளுகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

எனினும், குறித்த எவரும் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வராதகாரணத்தினால், இளைஞர்கள் இரவு 7 மணியளவில் போராட்ட்த்தைக் கைவிட்டு கலைந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435