100,000 இளைஞர் – யுவதிகளுக்கு தொழில் பயிற்சி

பல்துறை கலைஞர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் இளைஞர் – யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்றுவிப்பு அதிகாரசபை தயாராகிறது.

இதற்காக இளைஞர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இணைத்துக் கொள்ளப்படும் இளைஞர் – யுவதிகளுக்காக 25 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஆறு மாத காலம் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னிலையில் கைச்சாத்தானது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435