20ஆம் திருத்தச் சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

20ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்பையுடன் நேற்று மாலை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், ஆளுந்தரப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் ஆகியோரும் திருத்தத்திற்கு ஆதரவளித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இஷாக் ரஹ்மான், டயனா கமகே, எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம், எச்.எம்.எம் ஹாரிஸ், அ.அரவிந்தகுமார் ஆகியோரும் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

புத்தளம் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முஸ்லிம் கூட்டணியில் தெரிவு செய்த அலி ஷப்ரி ரஹீமும் திருத்தத்திற்கு ஆதரவளித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தன.

குழு நிலை விவாதத்தின் போது, இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பிலான சரத்திற்கு தனியாக வாக்கெடுப்பு கோரப்பட்டது.சரத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்தார்.

எவ்வாறாயினும், இறுதி வாக்கெடுப்பின்போது அவர் இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தார்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நசீர் அஹமட், பைசல் காசிம், ஆ.ளு. தௌபிக் ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இஷாக் ரஹ்மான், டயானா கமகே ஆகியோரும் இரண்டாவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார்இ புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் ஆகியோர் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் எதிராக வாக்களித்தனர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை பாராளுமன்றத்தில் 20ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்ப மீதான வாக்கெடுப்பிலும்;; மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டன.

திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம் : News.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435