கொட்டியாகும்புர போகல காரீய அகழ்வுச் சுரங்கத்தில் 1650 அடி ஆழத்தில் ஊழியர்கள் சிலர் நேற்று (10) சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சுரங்கத்தில் பணியாற்றும் 175 ஊழியர்களில் சுமார் நூறுபேர் சுரங்கத்தின் மேற்புறமாகவும் 35 பேர் சுரங்கத்தின் உட்புறமாகவும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வு, இராணுவ ஆட்சியை உடனடியாக நிறுத்தல், தொழிலாளர்கள் உரிமையை குறைக்காதீர், சுகயீன விடுமுறை 21 நாட்களை உடனடியாக வழங்குக, 9 மணி நேர வேலை நேரத்தை உடனடியாக நிறுத்துக போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன் போது போகல காரீய சுரங்கத்தின் நிறைவேற்ற அதிகாரி சிநேகபூர்வமாக தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
தொழிலாளர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் இது வரையில் இதுவரையில் இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என்று அகில இலங்கை நிறுவன தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதி அனந்த சரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் காரீய சுரங்கத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில் கடந்த வருடம் அதிக லாபம் கிடைக்கவில்லை என்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டுமே இலாபம் கிடைத்தது. அந்த லாபமானது தொழிலாளரின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. இந்த ஆண்டில் சிறந்த வருமானம் கிடைத்துள்ளது. இதேபோல் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியுமாயின் தொழிலாளரின் தேவையை நிறைவேற்ற முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
ஆர்ப்பாட்டம் மற்றும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுகயீனமுற்றால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்