தொழில் நிமர்த்தம் ஜோர்தான் நாட்டுக்கு சென்ற K.T.K.R நிஷாந்தி என்பவரை பற்றி எந்த தகவல்களும் கிடைக்கபெறாமையினால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.
இல.28 அபயகம போத்தல எனும் விலாசத்தில் வசிக்கும் K.T.K.R நிஷாந்தி, 20.02.2002 அன்று ஜோர்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். இவரை பற்றிய எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.
இவரை பற்றிய ஏதேனும் தகவல் தெரியுமாயின் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணக்கல் பிரிவு 111 க்கு 011-2864136 எனும் தொலைபேசி இலக்கதிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.