2016 /17 கல்வியாண்டுக்கு புதிய ஆசிரியர் பயிலுனர்கள் அனுமதி

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 2016 / 17 கல்வியாண்டு இருவருட ஆசிரியர் பயிற்சிக்கு மொத்தம் 343 ஆசிரியர் பயிலுனர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளதாக கலாசாலை அதிபர் மௌலவி ஏ.சி.எம்.சுபைர் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் ஆசிரிய கல்வித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்ட ஆசிரியர் பயிலுனர்கள் 244 பேருக்கான பதிவு நடவடிக்கைகள் இம்மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாகவும், இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் சுபைர் மேலும் தெரிவித்தார்.

ஆங்கிலம்- 83, ஆரம்பக்கல்வி- 66, கணிதம்- 28, விஞ்ஞானம்-24, இஸ்லாம்- 08, உடற்கல்வி-35 என மொத்தம் 244 பேர் முதற்கட்ட பதிவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

மீதி 98 ஆசிரியர் பயிலுனர்களின் இருவருட பயிற்சிக்கு கல்வியமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதிலும், மாகாணசபை விடுவிப்புக் கடிதம் கிடைக்காததினால், அவர்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விடுவிப்புக் கடிதம் கிடைத்ததும் அவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அதிபர் சுபைர் குறிப்பிட்டார்.

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கடந்த வருடங்களில் ஆசிரியர் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகை கணிசமானளவு வீழ்ச்சி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்/வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435