2017 பாதீட்டில் கல்விக்கான நிதி போதாது!

இலவச கல்விமுறை வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளது. 2017 பாதீட்டில் கல்வி, சுகாதார துறைகளுக்கு உரிய அளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி பேராதெனிய பல்கலைக்கழக மற்றும் உயர்தர மாணவர்கள் இன்று (20) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

நுவரெலியா – நானுஓயா பகுதியில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வித்துறைக்கு மற்றும் சுகாதாரத்துறைக்கும் உரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இன்று காலை நானுஓயா நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் சுதந்திரமானது இலவச கல்வி முறைமையே காணப்படுகின்றது. ஆனால், தற்போது அதற்கும் பணம் வழங்கப்பட வேண்டியுள்ளது. கல்வித்துறை வியாபாரமாக்கப்பட்டு வருகின்றது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நிதி குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலவசக் கல்வி முறைமை இல்லாதொழியும் நிலைமை உருவாகின்றது.
இது தொடர்பில் நல்லாட்சி அசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியிருந்த தோட்ட தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தாங்கள் பொருளதார ரீதியாக பாரிய பின்னடைவில் இருப்பதாகவும் ஏதோ ஒரு வகையில் தங்களின் பிள்ளைகளுக்கு கல்விக்காக செலவழித்து உயர்தரம் வரை கல்வி கற்றாலும், பல்கலைகழகம் தெரிவாகி செல்லும் பொழுது பொருளாதார சிக்கலின் காரணமாக பல்கலைகழகம் செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது இலவச கல்வி முறையினை அரசாங்கம் முன்னெடுக்கின்ற போதிலும் தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதனால் இதற்கு அதிகப்படியான பணத்தை செலவு செய்து கல்வியினை தொடர முடியாத நிலை ஏற்படும்.

தற்போது அரச பாடசாலைகளில் போதிய வளங்கள் இல்லாமலும் நானுஓயா, நுவரெலியா, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்கள் இன்மையினால் தூர பிரதேசங்களுக்கு சென்று இப் படிப்பினை தொடர வேண்டும்.

எனவே அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பதைவிட குறைப்பது நியாயம் இல்லை. அரசாங்கம் இதனை கருத்திற் கொண்டு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும் பொழுது கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435