கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் 49 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 57 பேர் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர், 389 பேர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) தெரிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் உலகில் 941 ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் 63 வீதமானவர்கள் கொலை செய்யப்பட்டு அல்லது வேண்டுமென்றே இலக்கு வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 2003ம் ஆண்டுக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் 2019ம் ஆண்டிலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம் – CNN
வேலைத்தளம்