2019ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, அடுத்த ஆண்டுக்கான பாதீடு இன்னும் முன்வைக்கப்படவில்லை.
இந்தநிலையில் அடுத்த ஆண்டுக்கான செலவினங்கள் தொடர்பான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை முன்வைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று விடுமுறை தினம் என்பதால், இன்று நடைபெறவிருந்த அமைச்சரவைக்கூட்டம் நாளை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிமூலம்: சூரியன் செய்திகள்