21வது நாளாய் போராட்டக்களத்தில் வடக்கு பட்டதாரிகள் சமூகம்

தமக்கான நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த மாதம்-28 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த கால வரையற்ற போராட்டம் நேற்று 20 ஆவது நாளை எட்டியுள்ளது.

எனினும், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு எழுத்துமூலமான உறுதிமொழிகள் எவையும் இதுவரை வழங்கப்படாத காரணத்தால் போராட்டம் இரவு பகலாகத் தீர்வின்றித் தொடர்கின்றது.

குறித்த போராட்டத்தில் திருமணமான பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உட்படப் பெண்கள் மிகவும் சிரமத்தின் மத்தியில் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள் வாகனத் தூசிகள் காரணமாக தடிமன், இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இளம் குடும்பப் பெண்ணொருவர் தாம் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த-2013 ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய போதிலும் இதுவரை பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படாத காரணத்தால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொண்டு தான் நாம் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது.

வேலை வாய்ப்புக் கிடைத்தன் பின்னர் திருமணம்செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் இடைநடுவில் திருமணம் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தற்போது திருமணம் முடித்துப் பல மாதங்கள் கடந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காத காரணத்தால் நாங்கள் பல்வேறு நெருக்கடிகளை வேண்டியுள்ளது எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள வேறொரு பெண் பட்டதாரி கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் இன்று இருபதாவது நாளாக எமது கவனயீர்ப்புப் போராட்டத்தைப் பல்வேறு துன்ப, துயரங்கள் மத்தியிலும் தொடர்கின்றோம். மழை, வெயில் என்றும் பாராமல் நாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றோம்.

பல்வேறு நோய்களுக்கும் நாங்கள் ஆட்பட வேண்டியுள்ளது. பெண்களைப் பொறுத்தவரை திருமணமான பெண்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலே விட்டு விட்டு மிகவும் சிரமத்தின் மத்தியில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் கர்ப்பிணிப் பெண்களும் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆனால், அனைத்து வலிகளையும் நாங்கள் தாங்கிக் கொண்டு எமது போராட் டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறோம்.

இந்த நிலையில் அனைவரும் பாராமுகமாக இருக்கிறார்களே தவிர எங்களுக்கு இதுவரை சரியானதொரு தீர்வை இதுவரை முன்வைக்கவில்லை.

நாங்கள் எங்களுக்கான சரியானதொரு தீர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். அதுவரை எமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

நன்றி- தமிழ் வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435