3 பேருக்கு கொரோனா: கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் 3 தொழிற்சாலைகள் மூடல்

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் மூன்று தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என விமான சேவைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி சானக்க தெரிவித்துள்ளார்.

இதனால், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் 3 தொழிற்சாலைகளின் பணியாளர்களையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்குமெனவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435