
பல்கலைகழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தம் தொடர்பில் பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க பொதுச்சபை கலந்துரையாடலொன்றை தற்போது ஆரம்பித்துள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைகழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் பங்களிப்பில் திறந்த பல்கலைக்கழகத்தில் இக்கலந்துரையாடல் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழில்சங்கங்களின் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் மற்றும் ஏழு அம்ச கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நேற்று (02) கலந்துரையாடினர்.
அக்கலந்துரையாடலில் பெறப்பட்ட தீர்வுகள் மற்றும் எதிர்கால திட்டம் என்பவை தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் என்று பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் பொதுக்குழுவில் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமைக்கு அரசியல் பின்னணியே காரணம் என்று உயர் கல்வி அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய தொழிலாளர் சங்கத்தின் கொழும்பு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்க கிளையின் செயலாளர் எஸ்.என் சேனாரத்ன கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை எழுத்து மூலமாக தமக்கு வழங்கினால் வேலைநிறுத்தத்தை கைவிட தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
வேலைத்தளம்