விசாரணைக்கு வருமாறு OPPOவுக்கு தொழில் ஆணையாளர் அவசர கடிதம்

சீன தொலைபேசி உற்பத்தி நிறுவனமான ஒப்போ OPPO கடந்த 2015ம் ஆண்டு இலங்கை கைத்தொலைபேசி சந்தையில் கால்பதித்தது. வெகுவிரைவில் இலங்கை கைதொலைபேசி விற்பனைச்சந்தையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட அந்நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் அதில் பணியாற்றும் உள்நாட்டு ஊழியர்களின் உழைப்பு முக்கிய இடத்தை வகித்தாலும் அது வௌிவராத ரகசியமாகவே உள்ளது

OPPO கையடக்க தொலைபேசிகளை ஒப்போ லங்கா பிரைவட் லிமிடட் என்ற நிறுவனம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனமானது தனது ஊழியர்களுக்கு நிறைவேற்றவேண்டிய சட்டரீதியான பொறுப்புக்களை கடுமையாக மீறியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

OPPO லங்கா பிரைவட் லிமிடட் நிறுவன ஊழியர்களில் பெரும்பாலானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் (ப்ரொடெக்ட்) PROTECT தொழிற்சங்க பிரதிநியொருவர் இந்நிலைமை தொடர்பில் எமது சகோதரமொழி இணையதளமாக வெடபிமவிற்கு கருத்து தெரிவிக்கையில், ஊழியர்களின் சம்பளப்பணம் சட்டவிரோதமான வகையில் கழித்துக்கொள்ளப்படுவதாகவும் நியாயமற்ற முறையிலான இடமாற்றங்கள், கடமைபொறுப்புக்களில் இருந்த திடீரென நீக்குவது, சட்டரீதியான விடுமுறைகளை ரத்து செய்தல் என பல அநீதியான செயற்பாடுகள் இந்நிறுவத்தினுல் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

கதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து ஊழியர்களினதும் தொழில் மற்றும் பதவிகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போது எமது தொழிற்சங்கம் முன்னெடுத்துள்ளது. சம்பளத்தில் இருந்த சட்டவிரோதமாக முறையில் கழித்துக்கொள்ளப்பட்ட பணம் உரிய முறையில் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் , மறுக்கப்பட்ட சட்டரீதியான விடுமுறைகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளபட்டுள்ளன. நிறுவன முகாமை எந்த காரணம் கொண்டும் தப்பிவிடாதிருக்கும் வகையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதத்திற்குள் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள Oppo நிறுவன முகாமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரதேச கிளைகளை அமைத்து அங்கத்துவர்கள் எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்கும் வகையில் தௌிவுபடுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டத்தை செயல்படுத்தி நீதியை நிலைநாட்டி தொழில் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு தயார்நிலையில் தாம் இருப்பதாகவும் PROTECT தொழிற்சங்க பிரதிநிதி மேலும் தெரிவித்தார்.

தற்போது இடம்பெற்று வரும் சட்டவிரோத செயற்பாடு, ஊழியர் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக தொழில் ஆணையார் திணைக்கள கைத்தொழில் தொடர்பு பிரிவுக்கு பொறுப்பான தொழில் ஆணையாளர் மனோஜ் பிரியந்த ஒப்போ பிரைவட் லிமிடட் நிறுவனத்தை எதிர்வரும் 19ம் திகதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு உடனடியாக சமூகமளிக்குமாறு நேற்று (14) அறிவித்துள்ளார் என்று ப்ரொடெக்ட் தெரிவித்துள்ளது

Oppo நிறவனம் தயாரென்றால் பிரச்சினையை பெரிதாக்காமல் நிறுவன முகாமையுடன் சட்டதிட்டங்களுக்கு அமைவாக தீர்த்துக்கொள்ள தாம் தயார் என்றும் PROTECT சங்க பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இளைஞர் சமுதாயத்தில் கற்ற இளைஞர் யுவதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தனிப்பட்ட சட்ட தொழிற்றிறனுடன் செயற்படும் தொழிற்சங்கமான PROTECT ஆனது தொழிற்சங்கங்கள் மத்தியில் பிரபலமடைந்திருப்பதுடன் பொருளாதாரத்தில் புதிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களை தனது அங்கத்தினர்களாக கொண்டுள்ளது. தற்போது OPPO நிறுவன ஊழியர்கள் மாத்திரமின்றி VIVO நிறுவன ஊழியர்களும் இத்தொழிற்சங்கத்தில் இணைந்து வருவதாக எமது அறியக்கிடைத்துள்ளது.

PROTECT பங்களிப்பில் தொழில் ஆணையாளர் OPPO நிறுவனத்திற்கு தம்மை சந்திக்குமாறு அனுப்பிய அவசர கடிதம் சிங்கள மொழியில் வாசிப்பதற்கு

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435