வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் வயதெல்லையை 45ஆக அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் அரச தொழில் நாடி விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 35 என மட்டுப்படுத்தி முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அதனை விடவும் அதிக வயதையுடைய பட்டதாரிகள் மற்றும் மக்கள் அமைப்பினரின் கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த வயதெல்லையை அதிகரிக்க நான் தீர்மானித்துள்ளேன்.
தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முதலாவது பட்டப் படிப்பு ஒன்றை, அல்லது அதற்கு சமமான தகைமையாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019. 12. 31ஆம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரி, தான் விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரி, 2020. 01. 01 ஆம் திகதி நிலவரப்படி – பட்டம் பெற்று ஒரு வருடத்திற்கும் அதிக காலம் தொழில் ஏதுமின்றி இருப்பவர் என கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்தவேண்டும்.
விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து –
பட்டச் சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பெறுபேறு ஆவணத்தின் புகைப்படப் பிரதி ஒன்றினை –
அந்த பிரதி, மூலப் பிரதியுடன் ஒத்திருப்பதை சமாதான நீதவான் ஒருவர் அல்லது சட்டத்தரணி ஒருவரின் மூலம் “உண்மைப் பிரதி” என்பதை உறுதிப்படுத்தி –
2020. 02. 20ஆம் திகதிக்கு முன்னர் –
இலங்கை தபால் திணைக்களத்தின் துரித சேவை (Speed Post) ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை சனாதிபதி செயலகத்தின் www.presidentsoffice.gov.lk என்ற இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி:
தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2020,
நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு,
ஜனாதிபதி செயலகம்,
காலி முகத்திடல்,
கொழும்பு – 01.
கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் –
பட்டதாரி எனின் “பட்டதாரி / (மாவட்டத்தின் பெயர்)”என்றும்,
டிப்ளோமாதாரி எனின் “டிப்ளோமாதாரி / (மாவட்டத்தின் பெயர்)” என்றும்,
குறிப்பிடப்படுதல் வேண்டும்.
குறித்த திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இதேவேளை, தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தில், தகைமைகளை பூர்த்தி செய்துள்ளவர்கள் தங்களின் விண்ணப்பப்படிவங்களை இந்த மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தமது காரியாலத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பப்படிவம் ஜனாதிபதி செயலகத்தின் www.presidentsoffice.gov.lk என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 0112 433 261 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.