வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில்வழங்கும் நடவடிக்கையின் போது 35 வயதுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் நேற்று (16) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளது.
இன்று (17) நடைபெறவுள்ள அமைச்சரவையில் 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளை சேவையில் இணைப்பதில் உள்ள பிரச்சினைக்கு தீர்வை பெறுவதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது.
அதற்கமைய, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் மேற்படி விடயம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாகவும் சங்கத்தின் அழைப்பாளர் ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.