ஆட்கடத்தல்கள் தொடர்பான இலங்கையின் வருடாந்த அறிக்கை ஒன்று அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக ரெிவிக்கபபட்டுள்ளது.
உள்துறை அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், இதன் நிமித்தம் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, இலங்கையில் செயற்படும் ஆட்கடத்தல்களுக்கு எதிரான செயலணியின் அலுவலர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வருடாந்த ஆட்கடத்தல் அறிக்கையில் இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்தி இருந்தது.
இதனைப் பேணும் வகையில் குறித்த அறிக்கையை இலங்கை தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.