நான்கு நாடுகளில் இருந்து 400 இற்கும் மேற்பட்டோர் இன்று நாடுதிரும்பியுள்ளனர்.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இன்று (21) காலை அபுதாபியில் இருந்து EK 667 விமானம் ஊடாக 21 பயணிகளும், டோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 42 பயணிகளும், இந்தியாவில் இருந்து UL 1026 விமானம் ஊடாக 58 பயணிகளும், டோஹா கட்டாரில் இருந்து UL 218 விமானம் ஊடாக 296 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.