அரச ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்து சேவை

அரச ஊழியர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் விசேட அலுவலக போக்குவரத்து சேவையொன்றை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குறித்த சேவையானது இரத்தினபுரி, கேகாலை, சிலாபம், அம்பாந்தோட்டை, தங்கல்ல, மாத்தறை, அம்பலங்கொடை, அளுத்கம மற்றும் களுத்துறை ஆகிய நகரங்களில் முதலில் இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க சிங்கள மொழி தேசிய நாளிதழான லங்காதீபவிற்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சேவையை பெற விரும்புபவர்கள் பதிவு செய்தல் வேண்டும். அதற்காக [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்படிவமொன்று அனுப்பி வைத்தல் அவசியம்.

விண்ணப்பப்படிவத்தில் முதலெழுத்துக்களுடன் பெயர், பணியாற்றும் நிறுவனம், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, பஸ்ஸில் ஏறும் இடம், அதிவேக வீதியுடனா அல்லது சாதாரண வீதியிலா பயணிக்க விரும்புகீறீர்கள்? சாதாரண பஸ்ஸிலா அதி சொகுசு பஸ்ஸிலா பயணிக்க விரும்புகீறீர்கள் மற்றும் பஸ்ஸில் ஏறவிருக்கும் இடத்தில் உள்ள பிரபலமான வீதி அடையாளம் போன்ற விபரங்கள் குறித்த விண்ணப்பத்தில் உள்ளடக்கப்படவேண்டும்.

கடமையாற்றும் இடங்களுக்கு காலை 8.30 மணிக்கு செல்லும் வகையிலும் பணி நிறைவடையும் நேரத்திலும் இப்போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,

விண்ணப்பங்களை டைப் செய்து அனுப்பும் வசதி இல்லாதவர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கத்திற்கு பிரவேசித்து கையால் எழுதப்பட்ட விண்ணப்பப்படிவத்தை புகைப்படமெடுத்து பதிவேற்றம் செய்து தம்மை பதிவு செய்துக்கொள்ள முடியும்.

கொவிட் 19 காரணமாக போக்குவரத்து வசதிகள் இல்லாது போன அரச ஊழியர்களுக்காக இச்சேவை ஆரம்பிக்கப்படுகிறது. இந்நிலை மாறிய பின்னரும் இச்சேவையை தொடர்ந்து முன்னெடுக்க எமது சபை எதிர்பார்த்துள்ளது என்று சபையின் தலைவர் ரணவக்க தெரிவித்துள்ளார்.

சேவை வெற்றியளித்தால் ஏனைய மாகாணங்களிலும் இச்சேவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறைபாடுகள் இருப்பின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு சேவை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435