தனியார்துறை ஒய்வுபெறும் வயது குறித்து கலந்துரையாடல்!

தனியார்துறையினர் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கின்றமை தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படுவதற்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக திரைசேரி செயலளாளர் எஸ். ஆர். அட்டியகல்லே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஓய்வு பெறுவதற்கான வயது அதிகரிக்கப்படுவதனூடாக தனியார்துறையினர் தமது ஊழியர் சேமலாப நிதியத் தொகையை 55 வயதில் மீளப்பெறுவதும் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே திரைசேரி செயலாளர் இவ்வாறு நேற்று (22) தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியத் தொகையானது பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் திருமணத்தின் போது வரதட்சணை வழங்க என பயன்படுத்தப்படுகிறது என்று சுட்டிக்காட்டியபோது 60 வயது வரை பணியாற்றுவதில் கிடைக்கும் நன்மை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டாய ஓய்வுக்க்கான வயது மாற்றம் தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே, படையினர், பொலிஸாருடைய ஓய்வூதிய வயதில் மாற்றமில்லை. தனியார் மற்றும் அரச துறையில் பணியாற்றுபவர்களின் வயது சமப்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட திட்டத்தை தனியார் துறையினர் கையாண்டால், இது குறித்து எந்த குழப்பமும் இருக்க முடியாது என்று நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி வலியுறுத்தினார்.

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து தன்னார்வ அல்லது கட்டாயமா என்பது குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நிதிச் செயலாளர் கூறினார்.

தற்போது தனியார் துறையில் ஆண்கள் மற்றும் பெண்களின் ஓய்வூதிய வயது முறையே 55 மற்றும் 50 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தின் படி அப்போதைய அரசாங்கம் இந்த நிதியை நிறுவியபோது, ​​ஆண்கள் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் முறையே 58.8 மற்றும் 57.5 என்று சுட்டிக்காட்டினார்.

நாட்டின் மிகப் பெரிய மேலதிக நிதி என்பது தனியார் மற்றும் அரை அரசுத் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குவதாகும்.

ஆண்களும் பெண்களும் முறையே 72 மற்றும் 76.6 என மதிப்பிடப்பட்ட ஆயுட்காலம் மிகவும் மேம்பட்ட வகையில் ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தில் தேவையான மாற்றங்களை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கை.

2021 வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவது வெறும் சம்பிரதாயமாகும், ஏனெனில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. வரவு செலவின் இரண்டாவது வாசிப்பு கடந்த சனிக்கிழமை (21) 99 வாக்குகள் பெற்று நிறைவேற்றப்பட்டது.

பண, மூலதன சந்தை மற்றும் அரச நிறுவன சீர்திருத்த அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒப்புதல் வழங்கியுள்ளார்.. தனியார் துறை ஊழியர்களின் தமது சேமலாப நிதியைப் பெறுவதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது குறித்து விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர் அமைச்சர், 20 சதவீத நிதியை உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்காக சிலரின் கோபத்தை சம்பாதித்தேன் என்று சுட்டிக்காட்டினார்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த பொருளாதார விவகார ஆலோசகராக தனது முன்மொழிவை கொரோனா தொற்று நாட்டின் ஆரம்பித்த காலப்பகுதியில் முன்வைத்தார். இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435