
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனத்தை 700 ரூபாவாக அதிகரித்து கூட்டு ஒப்பந்தத்;தை கைச்சாத்திட இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் , முதலாளிமார் சம்மேளனம், தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையே இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் காணொளி ஊடாக கருத்து வெளியிட்டுள்ளார்.