60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி வேலையில்லை – குவைத்

குவைத்தில் பணியாற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் வேலை அனுமதி (Work permit) மற்றும் தங்கியிருப்பதற்கான அனுமதி அட்டை (Iqama) என்பன புதுப்பிக்கப்படாது குவைத் அறிவித்துள்ளது.

இப்புதிய நடைமுறையானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அவ்வாறு அனுமதி பெறாதவர்கள் மூன்று மாதங்களுக்குள் நாட்டை விட்டு வௌியேறவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடைமுறையானது அரசதுறையினருக்கானதா, தனியார்துறைக்கானதா அல்லது இருதுறையினருக்குமானதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வௌியிடப்படாதநிலையில், அந்நாட்டு அரசாங்கம் குவைத் நாட்டினருக்கான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் புலம்பெயர்ந்தோருக்கு வேலைவாய்ப்பினை வழங்கிவருவதை குறைத்து வருகின்றமை கவனத்திற்கொள்ளத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435