நாட்டிலிருந்து வெளியேற இலங்கையர்கள் 62 ஆயிரத்து 338 பேருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 30 ஆயிரம் பேர் வரையிலானோர் பாதுகாப்பு தரப்புக்களைச் சேர்ந்தவர்கள் எனவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாதுகாப்புத் தரப்பினரில் உயர் மட்டத்தில் இருந்து கடை நிலை வரையிலான உத்தியோகத்தர்கள் பயணத் தடை விதிக்கப்பட்டோரில் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றங்கள், இராணுவ நீதிமன்றம் ஊடாக இந்த நபர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் பாதுகாப்பு தரப்பினருக்கு மேலதிகமாக அரசியல்வாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்பில் இருக்கும் சிலர், மத கடும்போக்காளர்கள் என வெளிநாட்டுப் பயணத் தடை பட்டியல் நீண்டுள்ளது.