8 ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை

நாளை (15) நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் 2 வார காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்திருப்பதாக அதன் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் – 19) பரவுதன் காரணமாக சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த தடை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும். தென்கொரியா இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு கடந்த 14 ஆம் திகதி தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக இந்த தடை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும்; அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435