எட்டு வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குருணாகலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
கல்வித்துறை சார்ந்த நிர்வாக கட்டமைப்புக்களின் பெரும் பகுதிகளில் நிர்வாக ரீதியான சீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாடசாலை மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றபோது, எதிர்ப்புக்கள் ஏற்படுகின்றன.
எனினும், அத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிடில் சர்வதேச ரீதியாக நிகழும் வளர்ச்சிக்கு இணையான வளர்ச்சியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியாது என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.