கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்த 99 வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வர்த்தக நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
16 அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த போதிலும் வர்த்தகர்கள் அச்சலுகையை மக்களுக்கு வழங்குவதில் அசமந்தப்போக்கை கடைப்பிடித்தனர். குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் விலை குறைப்பே செய்யப்படவில்லை. இது தொடர்பில் மக்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்ததையடுத்தே நுகர்வோர் அதிகாரசபை சுற்றிவளைப்பை மேற்கொண்டகை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்