டுபாய் அடையாள அட்டை மத்தியநிலையம் கட்டணமில்லா தொலைபேசி தொடர்பாடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் வசதி கருதி இத்தொலைபேசி 800 அடையாள அட்டை இலக்கம் (800 432273) தொடர்பு கொண்டு அரபி, ஆங்கிலம், ஹிந்தி, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உரையாடும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தொடர்பாடல் இலக்கத்தினூடாக வாடிக்கையாளர் தமது வீசா தொடர்பான கொடுக்கல் வாங்கல்களை தமக்கு அருகிலுள்ள வசதியான பிரதேசங்களில் மேற்கொள்ள முடியும்
அண்மையில் அந்நாட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவுப்புக்கமைய வீசா செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக தற்போது அடையாள அட்டை மத்திய நிலையமும் உள்வாங்கப்பட்டுள்ளது.
வேலைத்தளம்