பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்காக 525 மில்லியன் ஒதுக்க கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் அபிவிருத்தி நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 217 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த, கிளிநொச்சி, பரந்தன் இரசாயன தொழிற்சாலை யுத்தத்தின் காரணமாக முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.
பல்வேறு தயாரிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் கொஸ்ட்டிக் சோடா, குளோரின் என்பவற்றை உற்பத்தி செய்யக்கூடிய பரந்தன் இரசாயன தொழிற்சாலையானது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழியங்கும் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்