தனியார்துறைக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்காக இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளை நிறுத்தி அரசாங்கம் அதிகரித்த கொடுப்பனவை மட்டும் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பாகமுவ, பக்மிகொல்ல தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் உட்பட 80 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இக்கொடுப்பனவினால் தமது சம்பளம் ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள இவ்வூழியர்கள், மே மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
இவ்வநீதிக்கு எதிராக நாம் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளோம். அதனூடாக நீதி கிடைக்காத பட்சத்தில் தொழிற்சாலைக்கு முன்பாக உண்ணாவிரதம் இருப்போம் என்று இதன் போது அவ்வூழியர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் 2500 அதிகரிக்க முன்பே நாம் அவர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்கினோம். அரசினால் கொடுப்பனவு அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டால் நாம் வழங்கிய கொடுப்பனவை நிறுத்துவோம் என்று முன்னறிவித்தல் செய்திருந்தோம் என்றார்.
வேலைத்தளம்