ஐந்து பேருக்குக் குறைவான ஊழியர்களை கொண்டு நடத்தப்படும் வியாபாரத்தில் ஊழியர்களின் சம்பளத்தை நேரடியாக அவர்களுக்கு வழங்க முடியும் என்றும் வங்கி வைப்பிலிடவேண்டிய அவசியம் இல்லையென்றும் குவைத் மனித வளத்துக்கான பொது அதிகாரசபை அறிவித்துள்ளது.
ஊழியரின் நலன்கருதி குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரசபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சம்பளத்தை நேரடியாக தொழிலாளர்களுக்கு வழங்கும் தொழில் வழங்குநர்கள் அவை தொடர்பில் பதிவு செய்யப்படுவது அவசியம் என்றும் அதற்கான பதிவுப் புத்தகங்களை அதிகாரசபையே அச்சிட்டு தொழில் வழங்குநர்களுக்கு வழங்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வேலைத்தளம்