சமூக வலைதள விளம்பரங்கள் தொடர்பில் தூதரகத்தை நாடவும்

வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பிற்காக சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் தொடர்பில் தூதரங்கத்துடன் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளுமாறு டோஹாவில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

சமூக இணையதளங்களினூடாக விளம்பரப்படுத்தப்படும் இவ்வாறான விளம்பரங்கள் பாதுகாப்பற்றவையாக காணப்படுவதனால் அதனை உறுதி செய்வதற்கே தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறு டோஹாவுக்கான இலங்கை தூதரக ஆலோசகர் ஏ.கே. யு. ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாறு விளம்பரப்படுத்தி இணைக்கப்பட்ட பெண்களை பணிக்காக அமர்த்திய தொழில்வழங்குனர்களும் பல்வேறு முறைப்பாடுகளை தூதரகத்துக்கு வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள கவுன்சலர், குறித்த பணிப்பெண்கள் பணிக்கமர்த்துவதற்கான செயற்பாடுகள் பூர்த்தியான பின்னர் பின்வாங்குவதாகவும் சிலர் வீட்டை விட்டு சென்றுவிடுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

குறித்த மனித வள நிறுவனங்களினூடாக பணியாளர் ஒருவரை வேலைக்கமர்த்தும் போது 3 மாத காலத்திற்கு முகவர் நிலையமே அப்பணியாளருக்கு பொறுப்பு கூற வேண்டும். அவ்வாறு பணியாளர் சரியாக கடமைகளை நிறைவேற்றா விட்டால் அல்லது வீட்டை விட்டுச் சென்றால் முகவர் நிலையம் தொழிழ் வழங்குநருக்கு 15,000 கட்டார் ரியார் வழங்கவேண்டும் என்பது ஒப்பந்தமாகும்.

எது எவ்வாறாயிருப்பினும் சமூக வலைத்தளங்களினூடாக பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துவதாயின் இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு தெளிவுபடுத்துவது நன்மை பயக்கும்.

அத்துடன் இலங்கையிலிருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்லும் பயிற்சி பெற்ற மற்றும் பெறாத அனைவரும் வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படுவது அவசியம். வெளிநாடுகளில் வீட்டு பணிப்பெண்களாக செல்ல விரும்பும் பெண்களுக்கான குறுகிய கால பயிற்சிகளை பணியகம் வழங்குகிறது. அத்துடன் அந்நாட்டு பழக்க வழங்கங்கள், நடைமுறைகள், சட்டங்களை தெரிந்துகொள்ள இப்பயிற்சி ஏதுவாக இருக்கிறது. அத்தோடு தொழில் வழங்குநருடைய முகவரி, தொடர்பு இங்கு பதிவு செய்யப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நிபுணர்கள், பயிற்சி பெற்றவர்கள் மற்றும் வீட்டுப்பணிப்பெண்கள் என சுமார் 140,000 இலங்கையர்கள் கட்டாரில் பணியாற்றுகின்றனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொழில் தருநர்கள் தொடர்பாக வழங்கப்படும் முறைப்பாடுகளில் கட்டாரில் குறைவாகவே காணப்படுகிறது. பணிப்பெண்களாக செல்லும் பலர் சிறந்த தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக வீட்டை விட்டு சொல்லாமல் சென்று விடுகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் உடனடியாக தூதரகத்தை தொடர்புகொள்ளுவது பிரச்சினைகளை தவிர்க்க உதவும் என்றும் ஆலோசகர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435