கட்டார் புலம்பெயர் தொழிலாளர் மத்தியில் பரவும் வதந்தி

​தொழில் செய்யும் இடத்தை மாற்றுவது தொடர்பில் கட்டார் வாழ் புலம்பெயர் தொழிலாளர் மத்தியில்

தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர் என்றும் எனவே புலம்பெயர் தொழிலாளர்கள் இது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கட்டார் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் அந்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வீஸா வழங்கப்படுவதாகவும் சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கும் தொழில் மாற்றத்திற்கான சந்தர்ப்பங்களை கட்டார் அரசு வழங்குவதாக தவறான தகவல்கள் பரவுவதாக கட்டார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்டார் தொழிலாளர் திணைக்களத்திற்கு முன்பாக மக்கள் கூட்டம் காத்திருப்பது போன்ற வீடியோ வௌியானதைத் தொடர்ந்து தவறான கருத்துக்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அது மட்டுமன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுடைய ஆவணங்களை புதுப்பித்து வேலை இடங்களை மாற்றுவதற்காக 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியுள்ளதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கருத்து வௌியிட்டுள்ள அந்நாட்டு நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சு, புதிய தொழிலாளர் சட்டத்திற்கமைய ஒப்பந்தக்காலம் நிறைவடைந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமே தொழில் வழங்குரை புதிதாக பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435