ரயில் திணைக்கள வளாகத்தில் ஔிபரப்பப்படும் வர்த்தக விளம்பரங்களுக்காக தனியார் நிறுவனமொன்றிடமிருந்த அறிவிடப்படவேண்டிய 500 மில்லியன் ரூபா இது வரை அறவிடப்படவில்லை என்று ரயில் திணைக்கள தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் ரயில் திணைக்கள பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் எஸ். பீ. விதாதனகே கருத்து தெரிவிக்கையில் 500 மில்லியன் ரூபாவுக்கு பதிலாக இதுவரை வெறுமனே 24 மில்லியன் ரூபா மட்டுமே அறிவிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் விளப்பர ஒளிபரப்பு தொடர்பில் தனியார் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சரியான வரி வீதங்களை செலுத்தாத காரணத்தினால் அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. எனினும் இன்னும் செலுத்த வேண்டிய வரித்தொகையை அறிவிடுவதற்கு ரயில் திணைக்கள ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலைத்தளம்