கட்டாரில் கோடை விடுமுறை நிறைவடைந்ததோடு வீட்டுப்பணிப்பெண்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது.
விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு சென்ற கட்டார் மக்கள் மீண்டும் நாடு திரும்பியதையடுத்தே கிராக்கி அதிகரித்துள்ளது.
கட்டாரில் பணியாற்ற பிலிப்பைன், இந்தோனேஷியா போன்ற நாட்டுப் பெண்களே அதிக பணிப்பெண்களாக பணியாற்ற வருகின்றனர். அவ்வாறு அழைத்து வரும் ஒரு பணிப்பெண்ணை இணைத்துக்கொள்வதற்காக 400,000 – 500,000 இலட்சம் வரையான தொகை செலுத்தப்படுவதாக கட்டாரில் பணியாற்றும் முகவர் நிலையங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள கிராக்கி நிலையில் பயிற்சி பெற்ற, தகைமை வாய்ந்த இலங்கை பெண்களை பணியில் இணைத்துக்கொள்ள முடியும் என்று கட்டாரில் உள்ள முகவர் நிலையங்கள் தெரிவிக்கின்றன.
வேலைத்தளம்