
குவைத்தை சேர்ந்த பிரஜைகள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமைகளை கொண்டுள்ளவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பயணத் தடையினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீக்க குவைத் தீர்மானித்துள்ளது.
இந்தத் தகவலை குவைத் அமைச்சரவையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும், இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு இந்த பயணத் தடை நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளே பயணத்தடை விதிக்கப்பட்ட ஏனைய நாடுகளாகும்.