அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வை விட சக்தி வாய்ந்த நிலஅதிர்வொன்று மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தென் கொரியாவின் YTN தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
பொதுவாக நில அதிர்வொன்று ஏற்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அந்நில அதிர்வுகள் ஏற்கனவே ஏற்பட்டதை விடவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதனால் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர் என்று அத்தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இனிவரும் நில அதிர்வானது 6.5 ரிச்டர் அளவை விட அதிகமாக இருப்பின் பாரிய சேதங்களை எதிர்நோக்கவேண்டி வரலாம் என்றும் இவ்வதிர்வானது 7.5 ரிச்டர் அளவில் கடலில் ஏற்படும் பட்சத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் 9 அல்லது 9 இற்கும் மேற்பட்ட ரிச்டர் அளவில் அதிர்வு கடலில் ஏற்படுமாயின் பாரிய சுனாமி தாக்கம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ள ஆய்வாளர்கள் சிறு அதிர்வை உணர்ந்தாலும் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நாடி செல்லுமாறும் உரிய அதிகாரிகளுக்கு தெரியபடுத்துமாறும் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
தென் கொரியாவில் அதிக எண்ணிக்கையான இலங்கையர் தற்போது பணிபுரிகின்றனர். அவர்கள் இவ்விடயம் தொடர்பில் தெளிவாக செயற்படுவது பாதுகாப்பானது.
வேலைத்தளம்/YTN செய்திச்சேவை