இம்மாதம் 30ஆம் திகதியுடன் மிஹின் லங்கா விமானசேவை நிறுத்தப்படுவதனால் அதில் பணியாற்றும் 300 ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
விமானசேவையை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான என்ன தீர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் சம்பளம் வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் பின்னர் அவர்களின் நிலை என்னவென்பது தொடர்பில் இதுவரை எதுவித தீர்வும் வழங்கப்படவில்லை.
மிஹின் லங்கா விமாசேவையில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றுகின்றனர். எனினும் தமது தொழிலை பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதரிடம் மிஹின் லங்கா ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலைத்தளம்