இலங்கை உட்பட 7 நாடுகளில் உள்ள சவுதி தூதரகங்களில் புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான விசேட அலுவலகமொன்றை அமைப்பதற்கு சவுதி அமைச்சர்கள் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
சவுதி தலைநகர் ரியாத்தில் மன்னர் சல்மான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இடைத் தரகர்களின் செயற்பாட்டை தடுக்க இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள சவுதி தூதரகங்களில் இவ்விசேட அலுவலகம் நிறுவப்படவுள்ளது.
அந்நாட்டு பொருளாதார மற்றும் அபிவிருத்திக் குழுவின் பரிந்துரைக்கமைய இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.