மருத்துவக்காப்பீடு இல்லையேல் 500 திர்ஹம் அபராதம்- டுபாய் அரசு

டுபாயில் பணிபுரியும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களுக்கான மருத்துவ காப்பீட்டை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும் அவ்வாறு எடுக்காதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்தப்படவேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மருத்துவக்காப்பீட்டுக்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களில் 12 வீதமானவர்கள் இதுவரை மருத்துவக்காப்பீடு எடுக்கவில்லை என்று அறிய வந்ததையடுத்தே அந்நாட்டு அரசாங்கம் இவ்வெச்சரிக்கையை வௌியிட்டுள்ளது.

தொழில் புரியும் நிறுவனங்கள், தொழில்வழங்குநர்கள் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கான காப்பீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான பணத்தை ஊழியர்களிடமிருந்து அறவிடுவது சட்டவிரோமான செயலாகும். இதேவேளை, அங்கு தனிப்பொறுப்பில் வசிக்கும் பெற்றோர் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பொறுப்பானவர்கள் மருத்துவக்காப்பீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டுச் சாரதிகளுக்கு அவரவர்களுடைய முதலாளிமார் மருத்துவக்காப்பீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அபுதாபியில் ஏற்கனவே மருத்தவக்காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவக்காப்பீடு இருந்தால் மட்டுமே குடும்பங்களை வரவழைப்பதற்கான வீசா அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435