ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள பல நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையான பயிற்சி பெற்ற, திறமை மிக்க பணியாளர்களை தமது நிறுவனங்களில் அடுத்த ஆண்டு இணைக்க எதிர்பார்த்துள்ளன என அந்நாட்டு இணைதளமான கல்ப் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்நாட்டிலுள்ள கணக்கியல் நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் முன்றில் ஒரு பங்கு தொழில் வழங்குனர்கள் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் தமது நிறுவனங்களில் பயிற்சி பெற்ற வெளிநாட்டு பணியாளர்களை இணைத்துகொள்ள எதிர்பாத்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற, திறமையான பணியாளர்களை இணைத்துக்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியருப்பதால் வெளிநாட்டு பணியாளர்களில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனங்கள் உள்ளன.
அந்நாட்டிலுள்ள பாடசாலைகள், பல்கலைகழகங்களில் கற்று வெளியாகும் குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்கள் மட்டுமே அந்நாட்டின் ஆளணி தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.
துறைசார் நிபுணத்துவம் மிக்க பணியாளர்களை தெரிவு செய்வதில் காணப்படும் சவாலுக்கு முகம் கொடுப்பதற்காக எதிர்வரும் மூன்று வருட காலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு எதிர்வரும் மூன்று வருட காலப்பகுதியில் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
அதற்கமைய, கணக்கியில் துறை, நிதித்துறை, தொழில்நுட்பம், போன்ற துறைகளுக்கு, கணக்காளர்கள், நிதி கட்டுப்பாட்டாளர்கள், தனியார் வஙகி விற்பனை நிபுணர்கள், தொழில்நுட்ப பாதுகாப்பு முகாமையாளர்கள் மற்றும் பணச்சலவைக்கு எதிரான நிபுணர்கள் போன்றோரை நியமிப்பதில் ஐக்கிய அரபு இராச்சியம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.