தொழில்புரிவோருடைய சுகயீன விடுப்புக்கான புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கட்டார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“local Arabic daily Arrayah” செய்தித்தளத்தின் தகவல்களுக்கமைய தற்போது நடைமுறையிலுள்ள சுகயீன விடுப்பு சட்டத்திட்டத்தை விடவும் புதிய நடைமுறை இலகுத்தன்மை மிக்கதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய நடைமுறைக்கான பல்வேறு முன்மொழிவுகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை ஆராய்ந்து பார்த்து புதிய சுகயீன விடுப்பு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
பொது சுகாதார அலுவல்கள் அமைச்சு மற்றும் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சு என்பன இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள புதிய சுகயீன விடுப்பு நடைமுறையில் ஏற்கனவேயுள்ள விடுப்புமுறையில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் அமையும் என்று அவ்வமைச்சுக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக கல்ப் டைம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய நடைமுறை தொடர்பான விபரங்கள் எதிர்காலத்தில் வழங்க வெளியிடப்படும் என்று கட்டார் டைம்ஸ் தெரிவித்துள்ளது.