பிறந்துள்ள புத்தாண்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்வேறு துறைகளில் சம்பளம் அதிகரிப்பானது இனம், நாட்டில் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்கள், தொழிற்திறமை, கல்விநிலை, தொழிலாளர்களின் தொழில் வரலாறு மற்றும் தொழிற்சூழல் என்பவற்றை கருத்திற்கொண்டு அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.
உலகின் பிரசித்தமான அமைப்பு மற்றும் மத்திய கிழக்கு திட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளுக்கமைய பிறந்துள்ள 2017ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் குறிப்பாக டுபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் 4.6 வீதத்தால் சம்பளத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரு வருடங்களாக அமீரகததில் சம்பளம் 4 வீதமாகவே அதிகரிகப்பட்டு வந்த நிலையில் அதில் கைத்தொழிற்றுறையில் அனைத்து பிரிவுகளிலும் சம்பளம் உயர்வடைந்துள்ளதாகவும் இவ்வருடமும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், இந்தியா, பிலிப்பைன், இந்தோனேஷியா உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்து தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்களவு அமீரகத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது.
நாளொன்றுக்கு 12 மணி நேரம், 7 நாட்கள் பணியாற்றும ஊழியர்கள் ஓரளவுக்கு சம்பளம் பெறுவோர் ஆவர். மேலதிக கொடுப்பனவும் சேர்ந்து மாதாந்தம் குறைந்தது 600 டிராம் முதல் 1500 டிராம் வரையில் அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.
வீட்டுப் பணிப்பெண்கள், பராமரிப்பாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், பூங்கா நிர்வாகிகள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போன்றோர் குறைந்தளவு சம்பளம் வாங்கும் இரண்டாம் தரப்பினர் ஆவர்
பொதுவாக பார்த்தோமானால் மேற்கூறப்பட்ட பணியாளர்களுக்கு இவ்வாண்டு சம்பளம் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.