புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து வேறிடத்திற்கு மாறுவதாயின் அதனை ஒன்லைன் ஊடாகவே செய்துக்கொள்ளும் வசதியை கட்டார் அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
கட்டார் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் அதற்கான படிவம் மற்றும் விளக்கங்கள் வெகுவிரைவில் தரவேற்றம் செய்யபபடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் புதிய தொழில்வழங்குநர்களுக்கு விண்ணப்பிக்கும் போதும் நாட்டை விட்டு வௌியேறும் போதும் அந்நாட்டு நிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தின் ”Worker Notice e-service” என்று வழங்கப்பட்டுள்ள விடயத்தில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் தகவல் பெற்றுக்கொள்ளும் போது விண்ணப்பதாரிகள் கட்டாரில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பதாரின் சேவைக்காலம் ஐந்து அல்லது குறைந்த காலத்தையுடையதாயிருப்பின் 30 நாட்களுக்கு முன்னர் நிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சிடம் அறிவிக்க வேண்டும். குறித்த நாட்களுக்கு அதிகமான காலமாயிருப்பின் 60 நாட்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.