புலம்பெயர் தொழிலாளர் பணிபுரிய சிறந்த இடமாக சுவீடன் காணப்படுகிறது. மலர்ந்திருக்கும் புத்தாண்டில்ல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பல தொழில்வாய்ப்புக்களும் சுவீடனில் காணப்படுகிறது.
சுவீடனில் தொழில் நிமித்தம் செல்வோருக்கு பல சலுகைக உரித்துடையதாகிறது. பாதுகாப்பான, நட்புறவு மிக்க சூழலில் பணியாற்றுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.
தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் சுவீடனில் மிக கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அந்நாட்டு தொழிற்சங்கங்கள் மிகவும் பலம் மிக்கவையாக காணப்படுவதுடன் தொழிலாளர் உரிமையை பாதுகாப்பதில் பின்நிற்பதில்லை.
சுவீடன் வேலைச்சூழல் அதிகாரசபையானது (Sweden work environment authority) அனைவரின் உரிமைகளையும் பாதுகாப்பதில் மிக்க கவனத்துடன் செயற்படுகின்றது.
இன, மத, பேத மற்றும் பாலியல் சமத்துவம் போன்ற விடயங்கள் கவனத்தில் சுவீடனில் கவனத்தில் கொள்ளப்படாது திறமைக்கான களம் அமைத்துக்கொடுப்பதுடன் சமத்துவத்தும் மிக்க வேலைச்சூழல் சுவீடனில் காணப்படுகிறது.
சுவீடனில் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் 21 வயதுக்கும் குறைந்த திருமணமாகாத பிள்ளைகளுக்கும் அந்நாட்டில் வசிப்பதற்கான அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம். தொழில் மற்றும் கல்வி வாய்ப்பையும் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய உற்பத்திகளுக்கு பெயர் பெற்ற சுவீடனில் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிக வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன. IKEA, Ericsson மற்றும் Spotify போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அந்நாட்டில் தொழிலுக்காக நீங்கள் சென்றால் உங்கள் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் உங்களுக்கு போன்றே அனைத்து சமூக சலுகைகளும் பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. மருத்து சலுகை, கல்விச் சலுகை உட்பட இலவசமாக பல சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் பாதுகாப்பு, சுகயீன விடுப்புச் சலுகை, பிள்ளைகளுக்கான சலுகை, மருத்துவ சலுகை என்பன அவற்றில் உள்ளடங்குகின்றன.
எனவே வெளிநாட்டு தொழில்வாய்ப்பை நாடும் நீங்களும் இவ்வுன்னத வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும்.