போலி அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவை வைத்திருந்த இரு இலங்கையருக்கு 8 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம்.
கபில் (21) மற்றும் பிரசாத் (32) ஆகியோரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளனர் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கபில் என்ற நபரிடம் போலி கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை காணப்பட்டதுடன் அதனை பெற உதவிய பிரசாத் ஆகிய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்ட தலா 8 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் அந்நாட்டு குடிவரவு திணைக்களத்தின் துவாஸ் சோதனை சாவடியில் வைத்து கடந்த 29ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா செல்ல விரும்பிய கபில் அங்கு சாம் என்பவை தொடர்பு கொண்டு அதற்கான உதவியை வழங்குமாறு கோரியுள்ளதுடன் அதற்காக 600, 000 இலங்கை ரூபாவை வழங்க இணங்கியுள்ளார். குறித்த ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு பிரசாத் என்பவருக்கு கையளிக்கப்பட்டதையடுத்து அவர் அதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் உரிய ஆவணங்களை ஏற்பாடு செய்ய கோலாலம்பூரில் உள்ள மலேஷியரான மொஹம்மட் என்பவரின் உதவியை நாடியுள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரித்த பின்னர் லாவோஸுக்கான நேரடி விமானத்தில் செல்லும் முயன்ற வேளை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: The Straight Times
-Agencies